அயோத்தி:  ஜனவரி 22ந்தேதி நடைபெறும்  அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேசக விழாவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்துகொள்வார் என  விஎச்பி  தெரிவித்து உள்ளது.

ராம ஜென்மபூமி இயக்கத்தை முன்னின்று நடத்திய மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, ஜனவரி 22-ம் தேதி #அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்கிறார் விசுவ இந்து பரிஷத் இயக்கம் அறிவித்துள்ளது.

பாஜக மூத்த நிர்வாகிகளான  எல்.கே.அத்வானி, எம்.எம்.ஜோஷி ஆகியோர் வயதை கருத்தில் கொண்டு,  ராமர் கோவில் நிகழ்ச்சிக்கு “வரவேண்டாம்” என அறிவுறுத்தி உள்ளதாக  ராமர்கோவில்   அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய்  சமீபத்தில் தெரிவித்pதருந்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. ராமஜென்ம பூமி இயக்கத்துக்காக நாடு முழுவதும் ரதயாத்திரை மேற்கொண்டு,  ராமர்கோவில் அமைய அடித்தளம் அமைத்த அத்வானி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தது  சர்ச்சையை ஏற்படுத்தியதுன், பாஜகவினர் மட்டுமின்றி, இந்து மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

பாஜகவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய மூத்த தலைவர்கள் தற்போதைய பாஜக தலைவர்களால்  புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படும் அதை மெய்ப்பிப்பது போல ராமர்கோவில் நிகழ்ச்சியில்,  அயோத்தியில் ராமர்கோவில் உருவாக காரணமாக இருந்த அத்வானியை, வயதை காரணம் காட்சி கோவில் கும்பாபிசேகத்துக்கு வரவேண்டும் என கூறியது, இந்துமக்களிமடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதுடன், பாஜக மற்றும் ராமர்கோவில் அறக்கட்டளை மீது  கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதையடுத்து விளக்கம் அளித்த  கோவில் அறக்கட்டளை ஜெனரல் செசி சம்பத் ராய், அத்வானி 96 வயது ஆகும் முதியவர் மற்றும் எம்.எம். ஜோஷி முதியவர் என்பவர் அவர்கள் நலன் கருதி கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், பின்னர்,  இருவருக்கும் அழைப்பு அனுப்பியதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜனவரி 22ந்தேதி நடைபெறும் ராமர்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அத்வானி கலந்துகொள்வார் என விசுவ இந்து பரிஷத் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து விஎச்பி நிர்வாகிகள் கூறும்போது,  “நாங்கள் அவரை (அத்வானி) சந்திக்கச் சென்றபோது, அவருடைய வயதைக் கருத்தில் கொண்டு, அயோத்தியில், அவருக்கு  என்ன ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டோம். முழு விழாவிற்கும் அவர் உட்காரும் நிலையில் இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை அங்கு ஒரு மருத்துவர் தேவைப்படலாம். எனவே, அவர் வருகைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன என்று தெரிவித்து உள்ளனர்.

மேலும், அத்வானி, “ராம பிரான் பிரதிஷ்டையில் அவர் கலந்துகொள்வது முக்கியம் என்று நாங்கள் அவரது குடும்பத்தினரிடம் கூறியதாகவும்,    அவரது உடல்நிலை சீராக இருந்தால், அவர் வாருங்கள்என்று அழைத்துள்ளதாகவும் தெரிவித்ததுடன்,  அவரது ரத யாத்திரை நாட்டில் ராமர் கோவில் குறித்து பெரும் எதிர்பார்ப்பை  உருவாக்கியது என்பதை மறந்து விட முடியாது என்றும் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள ‘ராம பிரான் பிரதிஷ்தா’ நிகழ்ச்சிக்காக அயோத்தி அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 7,000 பேர் அழைக்கப்பட உள்ளனர். அவர்களில் கோவிலுக்கு 100 ரூபாய் வழங்கிய 10 கரசேவகர்கள், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சில தொழிலாளர்கள் மற்றும் ராம ஜென்மபூமி இயக்கத்தின் போது உயிரிழந்த கரசேவகர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் அடங்குவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக மூத்த நிர்வாகிகள் எல்.கே.அத்வானி, எம்.எம்.ஜோஷி கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு “வரவேண்டாம்”: ராமர்கோவில் அறக்கட்டளை