மும்பை:

பிரபல பாலிவுட் நடிகர் சசிகபூர் காலமானார். அவருக்கு வயது 79. வயது மூப்பு மற்றும் நீண்டநாள் உடல்நலக்குறைவு காரணமாக அவர் இன்று இறந்தார்.

சசிகபூர் 1938ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி பிறந்தார். பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து, திரையுலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார். நடிப்பு, இயக்குநர், தயாரிப்பாளர் என் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார்.

உலக புகழ்பெற்ற இந்திய நடிகர்களில் ஒருவரான சசிகபூர் 160 படங்களில் நடித்துள்ளார். இவர் இதுவரை 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். 2015-ம் ஆண்டு திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருதும், 2010ம் ஆண்டு பிலிம்பேரின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் அவர் பெற்றுள்ளார்.