வெக்கை என்ற நாவலை தழுவி வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த படம் அசுரன்.இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக தயாரிப்பாளருக்கு வருமானம் ஈட்டி கொடுத்தது.
இந்த படத்தினை தற்போது தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். அசுரன் தெலுங்கு ரீமேக்கை நடிகர் வெங்கடேஷ், தனுஷ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஸ்ரீ காந்த் அடலா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு மற்றும் சுரேஷ்பாபு இணைந்து தயாரிக்கின்றனர். மணிசர்மா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
”நாரப்பா” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முன்னோட்டம் ஒரு சிறிய வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் வெங்கடேஷ் அச்சு அசல் தனுஷைப்போலவே கதாபாத்திரத்திற்கு பொருந்த நடித்துள்ளார்.