2020-ம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு ட்விட்டர் தளத்தில் இந்த ஆண்டு திரையுலகில் சாதனை புரிந்த ஹேஷ்டேகுகள், பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை அறிவித்து வருகிறது.

தென்னிந்தியத் திரையுலகப் படங்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது #Master. ட்விட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் முதல் 10 இடங்களை #Master, #VakeelSaab, #Valimai, #SarkaruVaariPaata, #SooraraiPottru, #RRR, #Pushpa, #SarileruNeekevvaru, #KGFChapter2 மற்றும் #Darbar ஆகிய ஹேஷ்டேகுகள் பிடித்துள்ளன.

தென்னிந்திய நடிகர்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு. அவரைத் தொடர்ந்து பவன் கல்யாண், விஜய், ஜூனியர் என்.டி.ஆர், சூர்யா, அல்லு அர்ஜுன், ராம்சரண், தனுஷ், மோகன்லால் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அவரைத் தொடர்ந்து காஜல் அகர்வால், சமந்தா, ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே, டாப்ஸி, தமன்னா, ரகுல் ப்ரீத் சிங், ஸ்ருதி ஹாசன் மற்றும் த்ரிஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.