குழந்தைகளை மையமாக வைத்து உருவாகவிருக்கும் புதிய படத்தில் நடிகை சினேகாவும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் ஜோடியாக நடிக்க உள்ளனர்.

இந்த படத்தை அருணாச்சலம் வைத்யநாதன் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ஷாட் பூட் 3’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் மூலம் வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

நடிகை சினேகாவும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை. மேலும் இப்படத்தில் நடிகர் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.