மோகன்.ஜி இயக்கத்தில் ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தா, தம்பி ராமையா, விக்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

‘ருத்ர தாண்டவம்’ படத்தின் வில்லனாக இயக்குநர் கெளதம் மேனன் நடிக்கவுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அவர் வாதாபிராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்திருந்தார்.

ஒளிப்பதிவாளராக ஃபரூக், இசையமைப்பாளராக ஜூபின் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ‘திரெளபதி’ படத்தைத் தயாரித்த ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார்.

இந்த படத்துக்கு சென்சார் போர்டு அதிகாரிகள் ஒரு சில கட்டுகளுடன் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

‘ருத்ர தாண்டவம்’ படத்தின் மொத்த வெளிநாட்டு ரிலீஸ் மற்றும் ஆடியோ ரிலீஸ் உரிமையையும் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், ‘ருத்ர தாண்டவம்’ படத்தை அக்டோபர் 1 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.