இன்று (டிசம்பர் 25) பெண்கள் அனைவரும், தங்கள் நிலைபற்றி சிந்திக்க வேண்டிய தினம். “வீரமங்கை” என்று போற்றப்படும் வேலுநாச்சியார் மரணமடைந்த தினம்.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய பெண்ணான இவர் அறிவிற் சிறந்து வீரத்துடன் வெள்ளையரை எதிர்த்துப் போராடி சிவகங்கைச் சீமையை ஆண்ட வரலாற்றை நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம்.
அவரது இறுதிக்கால சோகம் பற்றி அநேகம் பேருக்குத் தெரியாது. கணவனை இழந்தநிலையில் படைக்கு தலைமை வகித்து வீரத்துடன் போரிட்ட தீரப்பெண்மணி மீது “முறையில்லா” உறவு வைத்திருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது. அவரது வாரிசாலேயே என்பது இன்னும் சோகம்.
மிகுந்த மனச்சோர்வுடன், வேதனையுடன் மரணத்தை எய்தினார் அந்த பெண்மணி.
ஆமாம்…அரசியாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் பெண், பெண்தான் என்பதற்கு வேலு நாச்சியாரின் சோக வரலாறு ஒரு உதாரணம்.
உண்மையில் அவரை வீழ்த்தியது வெள்ளைக்காரர்கள் அல்ல… அந்தப் பெண்மணியின் உறவுகள்தான்!
இதே போன்ற எண்ணற்ற வேலுநாச்சியார்கள், “பாலியல்” குற்றச்சாட்டுகளை (!)ச் சொல்லியே ஒடுக்கப்படுகிறார்கள்.. வீழ்த்தப்படுகிறார்கள்!
பெண்கள் சிந்திக்க வேண்டிய தினம் இது!