சென்னை:

நீட் தேர்வை எதிர்கொள்ளும் தமிழக மாணவர்களுக்கு அண்டைய மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கி உள்ள சிபிஎஸ்இக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் சென்னையில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்திற்கு சென்று உள்ளிறுப்பு போராட்டம் நடத்தினார்.

இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. உடடினயாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

 

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் போதுமான நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக சுமார் 1500 மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் சூழல் உருவாகி உள்ளது.

இதனால் மாணவர்கள் பெரும் அவதிக்கும், மன அழுத்தத்திற்கும்  ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று,  தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்மண்டல சிபிஎஸ்இ இயக்குநரிடம் மனு அளித்தார்.

தொடர்ந்து  சிபிஎஸ்இ அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ள தமிழக மாணவர்களை விமானம் மூலம் அழைத்து செல்ல சிபிஎஸ்இ நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேல்முருகன் 3 நேரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சிபிஎஸ்இ அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.