வேலூர்:

16வயது இளைய சகோதரியை கர்ப்பமாக்கிய 17வயது சகோதரன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் அருகே உள்ள பெருமுகை பகுதியில் உள்ள தினக்கூலி குடும்பத்தைச் சேர்ந்த 16வயது இளம்பெண் ஒருவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்த விசாரணையில், அவரது சகோதரரே அந்த சிறுமியை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, 17வயது சகோதரரை  மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தல் கைது செய்தனர்.

தனது 16 வயது தங்கையை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரை ஊடுருவியதாகவும் 17 வயது சிறுமியை வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர். எட்டு மாத கர்ப்பிணி செறுமி வேலூர் குழந்தைகள் நலக் குழுவில் (சி.டபிள்யூ.சி) ஒப்படைக்கப்பட்டார்.

குடும்பத்தின் ஏழ்மை காரணமாக தனது 10வது படிப்பை கடந்த ஆண்டு நிறுத்திய அந்த சிறுமி  கூலி வேலைக்கு சென்று வருவதாகவும், தனது தாயாருடன் இணைந்து சமையல் மற்றும் பிற வீட்டு வேலைகள் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த பெண்ணின் சகோதரர் (வயது 17) சிறுமி தனியாக இருந்தபோது,  பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இது குறித்து  பெற்றோரிடம் வெளிப்படுத்தினால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி உள்ளார்.

இதற்கிடையில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தால், மாதவிடாய் நிற்கவே, சந்தேகம் அடைந்த அவரது தாயார்,  அந்த பகுதியில் உள்ள  தனியார் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றார், அங்கு சோதனை செய்ததில், அந்த சிறுமி 8 மாதம் கர்ப்பம் என்பது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின், தாய் இதற்கு காரணமான தனது மூத்த மகன்மீது,  வேலூர் அனைத்து பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் கே.சுதா பாலியல் குற்றச்சாட்டுகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் 6 வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் சகோதரரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்றதைத் தொடர்ந்து,  செங்கல்பேட்டை அரசு சிறுவர்கள்  சிறப்பு இல்லத்தில் அடைத்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

[youtube-feed feed=1]