சேலம்: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளையமகன் வீரபாண்டி ராஜா காலமானார். இன்று அவரது பிறந்தநாளில் அவர் திடீரென மரணமடைந்த நிகழ்வு திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மகனும்,  வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள்  உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில்  ஒருவருமான வீரபாண்டி ராஜா சற்றுமுன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இன்று வீரபாண்டி ராஜாவின் பிறந்தநாள். இதையொட்டி,  தனது தந்தையின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வீடு திரும்பிய நிலையில், திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனே குடும்பத்தினர்  மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். ஆனால்,  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

[youtube-feed feed=1]