டில்லி:

காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற அணியில் இணைய விடுதலை சிறுத்தைகள் கட்சி தயாராக உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் டில்லியில் தெரிவித்தார்.

டில்லி சென்ற தமிழக விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்,  ‘காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற அணியில் இணைய விடுதலை சிறுத்தைகள் கட்சி தயாராக உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் உடனான சந்திப்பு மனநிறைவாக இருந்தது’ என்று கூறினார்.

டில்லியில் முகாமிட்டுள்ள திருமாவளவன், அங்கு கம்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச்சூரியை யும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

நேற்று 3வது அணி அமைக்க முயற்சி செய்துவரும் மம்தா கூட்டணியை சேர்ந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்தித்த நிலையில், திருமா வளவன் டில்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.