சென்னை: திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த 8 தொகுதிகளில்  2 பொது தொகுதிகளும் உள்ளது.

திமுக மற்றும் விசிக இடையே தொகுதிப் பங்கீடு இறுதியாகி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதற்கான ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது; இந்த உடன்படிக்கையின்படி, எதிர்வரும் தேர்தலில் போட்டியிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் விசிக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தொடக்கத்தில் விசிக தரப்பில் இரட்டை இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகள் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. இறுதியில் நடைபெற்ற  நிலையில்,பேச்சுவார்த்தைக்குப் பிறகு  8 தொகுதிகளுக்கு விசிக ஒப்புக்கொண்டது இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த 8 தொகுதிகளில், 6 தனித் தொகுதிகளிலும் மற்றும் 2 பொதுத் தொகுதிகளிலும் விசிக போட்டியிட உள்ளது.

முன்னதாக  நடைபெற்ற விசிக உயர்நிலை குழு கூட்டத்தில், திமுக கூட்டணியில் விசிக இரட்டை இலக்க  தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட் என தீர்மானம் போடப்பட்ட நிலையில், தற்போது வேறு வழியின்றி 8 இடங்களுக்கு ஒத்துக்கொண்டுள்ளது.

இதற்கிடையில் புதுச்சேரியில், திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட விசிக, அங்கு 3 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது குறிப்பிடத்தக்கது.

நேற்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 5 சீட் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.  ஆரம்பத்தில் 6 தொகுதிகள் வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. இதனால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. தொடர்ந்து பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, தி.மு.க வழங்க முன்வந்த 5 தொகுதிகளை ஏற்க அக்கட்சியின் மாநில செயற்குழு முடிவெடுத்தது. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் பெ.சண்முகம், தி.மு.க கூட்டணியில் அதிகமாககவும், புதிதாகவும் கட்சிகள் சேர்ந்த சூழலில் நாங்க கேட்கும் கூடுதல் தொகுதிகளை தரமுடியாத சூழல் உள்ளதாக முதலமைச்சர் கூறினார். 6-க்கு பதிலாக 5 தொகுதிகளை ஏற்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு எந்தவகையிலும் பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணிக்கு சாதகமாகிவிடக்கூடாது என்பதற்காக 5 தொகுதிகளை ஏற்கிறோம் எனத் தெரிவித்தார்.

[youtube-feed feed=1]