வாழப்பாடியாருடன் ஒப்பிட்டு பொன்னாரை புடம் போடும் நெட்டிசன்கள்!

Must read

காவிரி விவகாரம் உச்சத்தை அடைந்திருக்கும் இந்த நேரத்தில், மறைந்த மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியோடு, தற்போதைய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணை ஒப்பிட்டு சமூகவலைதளங்களில் காய்ச்சி எடுக்கிறார்கள் நெட்டிசன்கள்.

பொன் ராதாகிருஷ்ணன் - வாழப்பாடி. ராமமூர்த்தி
பொன் ராதாகிருஷ்ணன் – வாழப்பாடி. ராமமூர்த்தி

1991-ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. 1992-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு சாதகமாக செயல்பட்டது  “தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்படுகிறது” என்று முழங்கி, தனது மத்திய அமைச்சர் பதவியை துறந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி.
தற்போதும் அதே நிலை.
காவிரி மேலான்மை வாரியம் அமைக்க, உச்சநீதி்மன்றம் உத்தரவிட்டும்கூட, மத்திய அரசு மறுக்கிறது. “மத்திய அரசு, அப்பட்டமாக கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. வாழப்பாடி ராமமூர்த்திபோல தற்போதைய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது பதவியை துறப்பாரா” என்று கேட்டு, பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தற்போது இந்த பதிவுகள்தான் வைரலாக பரவி வருகின்றன.
ஆனால் இன்று மதுரையில் பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன், “காவிரி மேலான்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொள்ளாததால், இந்த விவகாரத்தில் எந்தவித பின்னடைவும் ஏற்படாது” என்று சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பொன் ராதாகிருஷ்ணனை நேக்கி கேள்வி கேட்கும், சமூகவலைதள பதிவுகள் சில…
1
பா. வெங்கடேசன்: ·
92 ல் அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக வாழப்பாடி ராமமூர்த்திஇருந்தார்.நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்து தன்னுடைய பதவியை ராஜினமா செய்து தன் கட்சியின் தலைமைக்கு எதிர்ப்பை தெரிவித்தார்.இன்று அதே காவேரி விவகாரத்தில் காவேரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க முடியாது என்கிற மத்திய அரசை எதிர்த்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏதாவது செய்வார் என்றெல்லாம் எதிர்பார்க்க கூடாது.அதற்கெல்லாம் கொஞ்சமாவது உணர்வுபூர்வமாய் தமிழக மக்களுடன் வாழ்ந்திருக்க வேண்டும்.
2
Paranji Sankaar
காவிரிக்காக வாழப்பாடி ராமமூர்த்தி போல் மத்திய அமைச்சர் பதவியை தூக்கி எறிவாரா பொன்.ராதாகிருஷ்ணன்?
3
 
 

More articles

Latest article