ச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுப்பது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன், மேலாண்மை வாரியம் குறித்து தமிழகத்தின் கருத்தை வலியுறுத்த அ.தி.மு.க. எம்.பிக்கள், பிரதமர் மோடியை சந்திக்க சென்றார்கள். அவர்களை சந்திக்க பிரதமர் மறுத்ததும் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
untitled
இந்த நிலையில், நடிகை காஜோலுடன் மோடி பேசிக்கொண்டிருக்கும் படத்தை வெளியிட்டு “கஜோலை சந்திக்க நேரம் இருக்கிறது. ஆனால் காவிரி பிச்சனையை பற்றி பேச வந்த எம்.பி.க்களை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை” என்ற பதிவு வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“பிரதமர்  அலுவலகத்தில் இல்லை இல்லை எனத் தெரிந்துதானே எம்.பி.க்கள் சென்றார்கள் ?” என்று சிலரும், “கடந்த ஜூன் மாதம் எடுக்கப்பட்ட படம்” என்று சிலரும் இதற்கு எதிர்வினையாற்றி இருக்கிறார்கள்.
ஆனாலும், “காஜோலை எப்போது சந்தித்தால் என்ன… இப்போது அதிமுக எம்.பிக்களை ஏன் சந்திக்கவில்லை” என்ற கேள்வியையே ஆதங்கத்துடன் பல்லாயிரக்கணக்கான நெட்டிசன்கள் எழுப்பியிருக்கிறார்கள்.