வரலாறு முக்கியம் அமைச்சரே…
(மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் அவர்களின் முகநூல் பதிவு)
 
2

1986லேயே…  இரவு பகலாக பணிச் சுமையோடு போராடிக்கொண்டிருந்த 21 ஆயிரம் ஒப்பந்தத்  தொழிலார்களுக்காக
களம் இறங்கிப் போராடினார்,  எனது மதிப்புமிக்க நண்பர் – சகோதரர் INTUC தலைவர் வாழப்பாடியார் !

21 ஆயிரம் ஒப்பந்தத்  தொழிலாளர்களையும் சங்க வித்தியாசம் அரசியல் வித்தியாசம்  இல்லாமல், தனது
INTUC  சங்கத்தின் கீழ்  கொண்டுவந்து, அவர்களுக்கான  சட்டப் போராட்டத்தை  துவக்கினார், வழக்கறிஞர் வாழப்பாடியார் !

உச்ச நீதிமன்றத்தில் INTUC சார்பில்  வழக்கு தொடர்ந்தார் ! உச்ச நீதிமன்றம், 1990 மே மாதத்தில்  ஒரு கமிஷனை
ஓய்வுபெற்ற  உச்ச நீதிமன்ற நீதிபதி காலித் தலைமையில்  அமைத்தது !

காலித் தலைமையிலான குழு, தமிழகம் முழுவதும் ஒரு வருட காலம் சுற்றுப்பயணம் செய்து, அறிக்கையை
தயாரித்து, உச்ச நீதிமன்றத்தில்  தாக்கல் செய்தது !
1991 பிப்ரவரி 10ல்  நீதிபதி காலித் கமிஷன்  பரிந்துரையை ஏற்று,” 21 ஆயிரம்  தமிழ்நாடு மின்சார வாரிய  ஒப்பந்தத் தொழிலாளர்களையும்  நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும்….” என்று,  உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது !
1
இந்தத் தீர்ப்பானது,  உலகத் தொழிற்சங்க  வரலாற்றில், முன் எப்போதும்  நிகழாத ஒன்று ! மிகவும் அபூர்வமானது !


INTUC தலைவர்  வாழப்பாடியார் போராடிப் பெற்ற தீர்ப்பை,  ஏழை – பாழை மக்களுக்காகப் போராடுவதாக
வாய் கிழிய பேசும்,  அதிமுக, திமுக அரசுகள், கடனே என்று,  இன்றைய தேதிவரை…  25% ஒப்பந்தத்
தொழிலாளர்களை மட்டும், மின் வாரியப்  பணியாளர்களாக  ஏற்றது !
இதற்குள்,  பல ஆயிரம் ஒப்பந்தத்  தொழிலாளர்கள் இறந்துப்போனார்கள்கள் !

வாழப்பாடியார்  இப்போது இருந்தால், மின் வாரியத்தில் காலியாக இருக்கும்  20 ஆயிரம் காலிப் பணியிடங்களில்
உயிரோடு உள்ள –  விடுப்பட்டுப்போன  பழைய ஒப்பந்தத்  தொழிலாளர்களை  நியமிக்க வலியுறுத்தி,
போராடியிருப்பார் !