சென்னை:
ன்று நடைபெற உள்ள  சென்னை ஐகோர்ட்டு முற்றுகை   போராட்டத்தையொட்டி ஐகோர்ட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. high toucrt
பாரிமுனை செல்லும் பஸ்கள் அனைத்தும் வேறு வழியாக திருப்பிவிடப்படுகிறது.  காலை 8.30 மணி முதல்  பாரிமுனை பஸ் நிலையத்திற்கு எந்த பஸ் வசதியும் இல்லை. சென்ட்ரல், பூக்கடை வழியக பாரிமுனை வரும் பஸ்கள் அனைத்தும்  தலைமைச்செயலகம்  வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது.
பார்கவுன்சில்  மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் குழு வழக்கறிஞர்கள் சட்டத்தை ரத்து செய்ய முடியாது  ஒரு சில திருத்தங்கள் செய்யலாம் என்றது. ஆனால் இதை வழக்கறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே வழக்கறிஞர்கள் சட்டத்தை ரத்து செய்யும்வரை போராட்டம் நடைபெறும் என ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.
ஏற்கனவே அறிவித்தபடி இன்று ஐகோர்ட்டு முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
இதையடுத்து இன்று  சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய பொதுமக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை காட்டினால் மட்டுமே நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டியலில் உள்ள வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் மட்டுமே உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படுவார்கள். சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் அனுமதி இல்லை என்று ஐகோர்ட் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல்துறை ஆணையர் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதன் காரணமாக வக்கீல்கள் போராட்டம் தீவிரம் அடையும் என தெரிகிறது. இன்றைய போராட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் ஐகோர்ட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஐகோர்ட்டை சுற்றி போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டை சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான கடைகள், குடோன்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான பேர்  வேலை செய்கிறார்கள்.    இவர்களில் பெரும்பாலோர் பஸ் பயணத்தையே நம்பி உள்ளனர்.
பஸ்கள் பாரிமுனை, ஐகோர்ட்டு பகுதிகளுக்கு செல்லாமல் பயணிகளை சென்ட்ரல், பீச் ஸஸ்டேஷசன் போன்ற இடங்களிலேயே இறக்கி விடப்படுகின்றனர். இதன் காரணமாக சென்ட்ரலில் இருந்து வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக  வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.