சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள ‘வசந்த முல்லை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது இந்த படம் . இன்று (நவம்பர் 6) சிம்ஹாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அப்படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ரமணன் புருஷோத்தமா இயக்கி வருகிறார்.
எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரித்து வரும் படத்துக்கு ‘வசந்த முல்லை’ எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வருகிறது.
சிம்ஹாவுக்கு நாயகியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். ஒளிப்பதிவாளராக கோபி அமர்நாத், இசையமைப்பாளராக ராஜேஷ் முருகேசன், எடிட்டராக விவேக் ஹர்ஷன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.