கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரசின் செயல் தலை வருமாகஇருந்த, தொழிலதிபர் எச்.வசந்தகுமார், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை யிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். அவருக்கு தொற்று குணமான நிலையில், இணை நோய்களின் பாதிப்பு காரணமாக அவரது உயிர் நேற்று மாலை பிரிந்தது.
வசந்தகுமாரின் உடல், அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக, இன்று சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த நிலையில், அவரது மறைவுக்கு அஞ்சலி செலத்தும் வகையில், அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் இன்று (ஆக.29) காலை முதல் அடைக்கப் பட்டுள்ளன. சாலைகள், வீடுகளில் கறுப்புக் கொடி கட்டப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கட்சி அலுவலகத்திலும், அவரது வீட்டிலும் வைக்கப்பட்டுள்ள அவரது புகைப்படத்திற்கு, உறவினர்களும், நண்பர்களும், தொண்டர்களும், ஊர் மக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகி ன்றனர்.
குமரி மாவட்டப் பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி பேனர்கள் பரவலாக வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
வசந்தகுமாரின் உடல், அவரது தந்தை, தாயாரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள அதே கல்லறைத் தோட்டத்திலேயே நல்லடக்கம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வசந்தகுமார் வீடு அமைந்துள்ள பகுதியில் காவல்துறையினரும், சுகாதாரத் துறையினரும் முகாமிட்டு தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.