தற்போது யோகிபாபு , யாஷிகா ஆனந்த் , கோபி, சுதாகர், T.M.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் பலர் பங்கேற்கும் ஜாம்பி படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

படப்பிடிப்பு தொடர்ந்து இரவு நேரத்தில் பிரபல வி.ஜி.பி போன்ற ரிசார்ட்களில் வைத்து தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது.
சென்னை முதல் பாண்டிச்சேரி வரை உள்ள ஈசியார் சாலையில் பயணிக்கும் இப்படத்தின் கதை ஒரு நாள் , ஓர் இரவில் நடப்பது போல் உருவாகியுள்ளது.

வேகமாக உருவாகிவரும் ஜாம்பி படத்தை படக்குழுவினர் சம்மர் ரிலீசாக வெளியிடவுள்ளனர். புவன் நல்லன் இயக்கும் இப்படத்துக்கு இசை பிரேம்ஜி.
Patrikai.com official YouTube Channel