வர்தா புயல்: அவசர உதவி எண்கள்! அரசு அறிவிப்பு

Must read

 சென்னை,
ர்தா புயல் காரணமாக நாளை தமிழகத்தில் 5 மாவட்டங்கள்  மற்றும் புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகிய ‘வர்தா’ புயல் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் சென்னை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால் வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் புயல் நாளை கரையை கடக்கும் போது 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து பொதுமக்களின் உதவிக்காக இலவச அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வர்தா’ புயல் – கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள்…
 சென்னை கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள் :
044 – 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694, 2536 7823, 2538 7570.
 வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள எண்கள் : 94454 77201 / 203 / 205 / 206 / 207.
திருவள்ளூர் கட்டுப்பாட்டு அறை எண் : 044 – 27664177.
புயல் முன்னெச்சரிக்கை அடுத்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தனியார் நிறுவனங்களும் நாளை விடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

More articles

Latest article