வாரிசு படத்தில் இருந்து ‘தி சோல் ஆப் வாரிசு’ பாடல் வெளியானது.

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் வாரிசு படத்தை இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்திற்காக சின்னக்குயில் சித்ரா பாடிய மூன்றாவது பாடல் இன்று வெளியாகி உள்ளது.

எஸ். தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே விஜய் பாடிய ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ மற்றும் சிம்பு பாடிய ‘தீ தளபதி’ ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வாரிசு படத்தின் கோவை மற்றும் சென்னை சுற்றுப்பகுதி மாவட்ட திரையிடும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.