மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது : “மோடி அரசு கொண்டு வந்த பல்வேறு சட்டங்கள் ரத்து செய்யப்படும் அதில் முதன்மையானது சிஏஏ சட்டம்.

தவிர, விவசாயிகள் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வசதி சட்டம் 2020, ஐபிசிக்கு இணையான பாரதீய நியாயா (இரண்டாம்) சன்ஹிதா, சிஆர்பிசி என்ற பாரதீய நாகரிக் சுரக்ஷா (இரண்டாம்) சட்டம் இந்த ஐந்து சட்டங்கள் முற்றிலும் நீக்கப்படும் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டங்கள் உருவாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.