ஆடி மாதத்தில் பெளர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் துணைவியும், செல்வங்களை அளித்தருளக்கூடிய மகாலட்சுமி தேவியை போற்றி வணங்கி அவரின் அருளாசி பெறுவதே இந்த விரதத்தின் நோக்கம்.
இந்தாண்டு வரலட்சுமி விரதம் இன்று ஜூலை 31ம் தேதி (ஆடி 16) வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.

வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை செய்ய உகந்த நேரம்
வரலட்சுமி விரதம் 2020 ஜூலை 31 வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படும்
சிம்ம லக்னம் பூஜைக்கான உகந்த நேரம் (காலை) – 06:59 முதல் 09:17 வரை (காலம் – 02 மணி 17 நிமிடங்கள்)
விருச்சிக லக்னம் பூஜைக்கான உகந்த நேரம் (பிற்பகல்) – 01:53 முதல் 04:11 வரை (காலம் – 02 மணி 19 நிமிடங்கள்)
கும்ப லக்னம் பூஜைக்கான உகந்த நேரம் (மாலை) – 07:57 முதல் 09:25 வரை (காலம் – 01 மணி 27 நிமிடங்கள்)
ரிஷப லக்னம் பூஜைக்கான உகந்த நேரம் (நள்ளிரவு) – 12:25 முதல் 02:21, ஆகஸ்ட் 01 (காலம் – 01 மணி 56 நிமிடங்கள்)
மற்ற லக்னகாரர்கள் அன்று நல்ல நேரம் வரக்கூடிய காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் அல்லது மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை பூஜை செய்யலாம்.
 
சுமங்கலிகள் உபவாசமிருந்து பக்தி சிரத்தையுடன் வீட்டை சுத்தம் செய்து கோலமிட்டு ஒரு மண்டபம் அமைத்து அம்மண்டபத்தில் முதலில் ஒரு அடி சதுரமாக நெல்லைப் பரப்பி அதன் மீது ஒரு தாம்பாளத்தில் அரிசியை பரப்பி அதன் மீது ஒரு வெள்ளி அல்லது செப்பு குடத்தை அல்லது பித்தளை செம்பை வைத்து, அதில் அரிசி அல்லது ஜலத்தால் நிரப்பி மாவிலைக் கொத்து தேங்காய் வைத்து, கலசத்தில் அம்பாள் முகம் வரைந்து முடிந்தால் தேவியின் முகம் வைத்து அலங்காரம் செய்து புஷ்பங்களால் அலங்கரித்து சந்தனம் அட்சதை புஷ்பங்களால் வரலஷ்மி தேவியை அர்ச்சனை செய்ய வேண்டும். வழிபாடு செய்ய நோன்பு கயிறு சார்த்தி கொழுக்கட்டை, அப்பம், சுய்யம், வடை, பாயசம், இட்லி, சாதம், பருப்பு நெய், தயிர், பழவகைகள் படைத்து வழிபட வேண்டும்.

மறுநாள் சனிக்கிழமையன்று புனர் பூஜை என்கின்ற பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்த சுண்டல் முதலியவற்றைக் கொடுப்பது வழக்கம்.