விஷாலுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்த வரலக்ஷ்மி சரத்குமார்……!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் நாசர் தலைமையில் போட்டியிட்ட பாண்டவர் அணி மீண்டும் போட்டியிட இவர்களை எதிர்த்து பாக்யராஜ் தலமையில் ஐஷரி கணேஷ், பிரசாந்த், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகர்கள் சுவாமி ஷங்கரதாஸ் அணி என்ற பெயரில் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.

இதற்கு நடிகை வரலக்‌ஷ்மி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.“வீடியோவை பார்த்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். உங்கள் மீது வைத்திருந்த மரியாதை முற்றிலுமாக போய்விட்டது” என்று கூறியுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: pancha pandavar, swamy shankardas, varalakshmi sarathkumar, video, Vishal
-=-