தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் நாசர் தலைமையில் போட்டியிட்ட பாண்டவர் அணி மீண்டும் போட்டியிட இவர்களை எதிர்த்து பாக்யராஜ் தலமையில் ஐஷரி கணேஷ், பிரசாந்த், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகர்கள் சுவாமி ஷங்கரதாஸ் அணி என்ற பெயரில் போட்டியிடுகின்றனர்

இந்நிலையில், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பாரதி பிரியன் உள்ளிட்ட 61 பேர் சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்தனர். விதிமுறைகளை மீறி உறுப்பினர்களை நீக்கியது தொடர்பாக நடிகர் சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனால், நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது. மொத்தம் 68 பேர் போட்டியிடுகின்றனர். இதில் ரமேஷ் கண்ணா மற்றும் விமலின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.