சென்னை :
கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது முதல்வர் எடப்பாடி முன்பு வி.ஏ.ஓக்கள் கோஷமிட்டனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரை ஆற்றிக்கொண்டிருந்தார்.
அவர் பேசும்போது, அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைய களப்பணி ஆற்றுபவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் என்றும், பொதுமக்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கான பரிந்துரைகளை வழங்குபவர்கள் கிராம நிர்வாக அலுவர்கள் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது 12,616 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர் எனவும், அரசு அமைப்பில் எண்ணற்ற அதிகாரங்களை கொண்டவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் என்றும் பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது கிராம உதவியாளர்களில் ஒரு பிரிவினர், அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். தங்களது கோரிக்கை எதையும் அரசு நிறைவேற்றவில்லை என்றும், காலமுறை ஊதிய உயர்வு தொடர்பாக முதல்வர் அறிவிப்பு வெளியிடாததால் கிராம நல உதவியாளர்கள் முழுக்கமிட்டனர். இதன் காரணமாக கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
முதல்வர் மேடையில் இருக்கும்போதே போராட்டம் நடத்தியதால் முதல்வர் அதிர்ச்சி அடைந்தார்.