டில்லி,

லைநகர் டில்லியின் ஜந்தர் மந்திரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்றைய போராட்டத்தின்போது, அகதிகள் போல உடைமைகளை தலையில் சுமந்து சென்று போராட்டம் நடத்தினர்.

கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டில்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் போராட்டம் இரண்டாவது கட்ட போராட்டம்  இன்றோடு 33வது நாளை எட்டுகிறது.

இதற்கிடையில், கடந்த 15ந்தேதி சுதந்திர தினத்தன்று பாதுகாப்பு கருதி, ஜந்தர் மந்திரில் போராடிய விவசாயிகளை போலீசார் கைது செய்து பாராளுமன்ற காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர்.

இதை கண்டிக்கும் வகையில், இன்றைய போராட்டம் நடைபெற்றது.

சுதந்திரத் தினத்தன்று கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு  உண்ண உணவு மற்றும் தண்ணீர்கூட தராமல் சிறைகைதிகளை போல் நடத்தியதாகவும், ஜந்தர் மந்திரை விட்டு வெளிப்புறம் எங்குமே செல்லவிடாமல் அனைத்து வழிகளையும் அடைத்து போலீஸ் காவல்வேளி அமைத்து தமிழக விவசாயிகளை அடிமைகளை போல் நடத்துவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இந்த அடக்குமுறையை கண்டித்து, அய்யாகண்ணு தலைமையில்,  இன்று விவசாயிகள் அகதி களாக உடைமைகளை தலையில் மூட்டை, முடுச்சுகளாக சுமந்து வெளி நாடுகளில்   தஞ்சம் புகுவதைப்போல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.