நாளை மறுதினம் தொடங்குகிறது விஏஓ கவுன்சிலிங்!

சென்னை,

மிழகம் முழுவதும் விஏஓ பணிக்கான 4வது கட்ட கலந்தாய்வு நாளை மறுதினம் (அக்.12) தொடங்ககிறது டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது.

வி.ஏ.ஓ காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான 4-ஆம் கட்ட கலந்தாய்வு அக்டோபர் 12 ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என்று அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நடைப்பெற்றது.

இந்நிலையில் தற்போது காலியாக உள்ள இடங்களை நிரப்ப 4-ம் கட்ட கலந்தாய்வானது அக்டோபர் 12-ம் தேதி சென்னையிலுள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும்.

இந்த கலந்தாய்வுக்கான அழைப்பு உத்தரவை தேர்வாணய இணையதளமான www.tnpsc.gov.in- இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுதொடர்பான தகவல்கள் மின்னஞ்சல் வாயிலாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
English Summary
VAO Counseling starts, the day after tomorrow! TNPSC Announced