சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று  தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு குறித்து பேசியதாக செய்தியயாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

இன்றுகாலை சென்னை தலைமைச்செயலகம் வந்த, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்,  தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் சந்தித்து பேசினார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

என்.எல்.சி விவகாரம், வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரம் ஆகியவை குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டதாக  தகவல்எ வெளியானது.

பின்னர் செய்தியளார்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சரை மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினேன் என கூறினார். மேலும்,  வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு எந்த சமுதாயத்திற்கும் எதிரானது கிடையாது என்று கூறியவர்,  நீர் மேலாண்மை பிரச்சனைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி உள்ளோம் என தெரிவித்தார்.