மதுரை:  குடியரசு தலைவராக பொறுப்பேற்றபிறகு முதல்முறையாக தமிழகம் வந்த ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று மதியம் மதுரை மீனாட்சியை தரிசனம் செய்தார்.

இதற்காக இரண்டு பயணமாக  மகா சிவராத்திரியை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இன்று மதுரை மீனாட்சியை தரிசித்து விட்டு, இரவு கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்கிறார்.  இதையொட்டி, மதுரை, கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில்  அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதைக் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை முதல் கோயில், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் காவல் துறையினர் தங்கள் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.  பாதுகாப்பு காரணங்களுக்காக கோயில் வளாகத்தில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன் கேமராக்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிபு உயரமான மாடிகளின் மீது இருந்தும் ஆயுதம் ஏந்திய காவல் துறையினர் மீனாட்சி அம்மன் கோயில் வளாகம் முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

‘டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை   தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர்  நேரில் வரவேற்றனர்.  தொடர்ந்து,  விமான நிலையத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் கார் மூலம் சாலை மார்க்கமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றார். அங்கு கோவில் நிர்வாகம் சார்பில், அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர், மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து, மதுரை  சுற்றுலா மாளிகையில் 20 நிமிடங்கள் ஓய்வு எடுக்கிறார். அந்த நேரத்தில் எந்தவித அரசியல் தலைவர்களையும் சந்திக்கவில்லை. கோயிலில் மதிய உணவு உண்ட பிறகு மதுரையிலிருந்து கார் மூலம் விமானம் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவை சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்கிறார்.

இதனை தொடர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனி விமானத்தில் மாலை 3.10 மணியளவில் கோவை விமான நிலையம் செல்கிறார். பின்னர் அவர் குண்டுதுளைக்காத பிரத்யேக காரில் புறப்பட்டு ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

இதைத்தொடர்ந்து கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். அங்கு, மாலை 5.45 மணியளவில் தியானலிங்கம், யோகேஸ்வர லிங்கத்தை வழிபாடு செய்கிறார். பின்னர் அவர், இரவு 7.30 மணிக்கு காரில் புறப்பட்டு ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து இரவு தங்குகிறார். பின்னர் அவர் நாளை காலை 9 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்கு போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். நண்பகல் 12 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கோவை விமானநிலையம் வந்தடைகிறார்.

பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். குடியரசு தலைவர் வருகையையொட்டி மதுரை மற்றும் கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.