நடிகை வனிதாவுக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவு….!

Must read


நடிகை வனிதா பீட்டர் பால் திருமணம் பல்வேறு சர்ச்சைகளை உருவாகியுள்ளது .
வனிதாவின் திருமணத்தை சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தை சேர்ந்த சூர்யா தேவி (27) என்ற பெண் விமர்சித்து தனது ‘யு-டியூப்’ சேனலில் வெளியிட்டார்.
இதையடுத்து போரூர் காவல் நிலையத்தில், சூர்யா தேவி மீது வனிதா புகார் அளித்தார்.
இந்நிலையில், போலீஸார் கடந்த 23-ம் தேதி இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தனர். விசாரணைக்குப் பின் சூர்யா தேவி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் .
கைது நடவடிக்கையின் விதிமுறைப்படி சூர்யா தேவிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், வடபழனி மகளிர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். தற்போது சோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில், சூர்யா தேவி மற்றும் பெண் ஆய்வாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் சூர்யா தேவி கைது செய்யப்படும் போது காவல் நிலையத்தில் உடன் இருந்த, நடிகை வனிதா மற்றும் காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

More articles

Latest article