டெல்லி: 2024ம் ஆண்டு முதல் வந்தேபாரத் ரயிலில் படுக்கை வசதி இடம்பெறும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது.
இந்திய ரயில்வே துறையில் வந்தே பாரத் அதிவேக ரயில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பிடித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 25க்கும் அதிகமான வந்தே பாரத் ரயில்கள் பயன்படுக்கு வந்த நிலையில் தமிழ்நாட்டிலும், சென்னை மைசூர் மற்றும் சென்னை கோவை இடையே இயக்கப்பட்டு வருகிறது. அடுத்த சில மாதத்தில் இன்னும் சில ரயில்கள் மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப் பட உள்ளது.
தற்போது வரை நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் வந்தேபாரத் ரயில்கள் பகல் நேரங்களில் மட்டும் இயக்கப்பட்டு வருவதுடன், உட்காரும் வசதி மட்டுமே உள்ளது. இதனால் நெடுந்தூரம் செல்லும் பயணிகள் வந்தேபாரத் ரயிலை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதையடுத்து, இரவு நேர சேவை மற்றும் வெகுதூரம் செல்லும் வகையில், படுக்கை வசதியுடன் கூடிய வந்தேபாரத் ரயிலை இயக்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் ஸ்லீப்பர் பெட்டிகள் (படுக்கை வசதி) மார்ச் 2024 இல் அறிமுகப்படுத்தப்படும், அதே நேரத்தில் வந்தே மெட்ரோ அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அதன் செயல்பாடுகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை ஐசிஎஃப்-ல் (இந்திய ரயில்வேயின் இன்டக்ரல் கோச் பேக்டரி) இரண்டு புதிய வகை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தயாரித்து வருகிறது. . நீண்ட தூரப் பயணங்களுக்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
2024ம் ஆண்டு மார்ச் மாதம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் ஸ்லீப்பர் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதே நேரத்தில் வந்தே மெட்ரோ அடுத்த ஆண்டு ஜனவரி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய இரயில்வே சென்னையில் இரண்டு புதிய வகை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்களை உருவாக்குகிறது. ராஜ்தானி, சதாப்திக்கு பதிலாக வந்தே பாரத் இரயில் பயன்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வந்தேபாரத் ரயில், மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இருப்பினும், தண்டவாளத்தில், மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் இரயில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பயணிகள் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாகச் செல்ல முடியும்.
வந்தே பாரத் இரயில்களின் ஸ்லீப்பர்கள் படிப்படியாக ராஜ்தானி இரயில்களுக்கு மாற்றாக இருக்கக் கூடும். மறுபுறம், சதாப்தி இரயில்களுக்குப் பதிலாக நாற்காலி கார் பதிப்பு இருக்கும்.
இந்திய இரயில்வேயால் 400 வந்தே பாரத் இரயில்களுக்கான டெண்டர் வெளியிடப்பட்டது. முதலில் தயாரிக்கப்படும் 200 இரயில்கள் எஃகால் ஆனவை மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற இருக்கை வசதிகள் அமைக்கப்படும். இரண்டாதாக அலுமினியத்தால் செய்யப்பட்ட ஸ்லீப்பர் கோச்சுகள் இருக்கும்.
டெல்லி-கொல்கத்தா மற்றும் டெல்லி-மும்பை இரயில் பாதைகளில் வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் இயக்கப்படுவதற்கு முன்பு அதிகாரிகளால் சரி செய்யப்படும். அதிகாரிகள் இரயில் வழித்தடங்களில் உள்ள பாலங்கள் மற்றும் சிக்னல் அமைப்புகளில் பணியாற்றுவார்கள்.
பயணிகளின் குறுகிய தூரப் பயணத்திற்கு வசதியாக வந்தே மெட்ரோ ரயிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய வகை வந்தே பாரத் இரயிலில் 12 பெட்டிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.