தோகா, கத்தார்

ர் இந்தியாவின் தோகா – திருவனந்தபுரம் விமானம் தரை இறங்க அனுமதி கிடைக்காததால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசு வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியர்களை வந்தே பாரத மிஷன் என்னும் திட்டத்தின் கீழ்  ஏர் இந்தியா விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளது.  அதன்படி கடந்த 7 ஆம் தேதியில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

அவ்வகையில் நேற்று கத்தார் நாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து தோகா விமான நிலையத்துக்கு ஒரு விமானம் சென்றது.  அதில் தோகாவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பயணம் செய்ய இந்தியப் பயணிகள் தயாராக இருந்தனர்.

ஆனால்  அந்த விமானம் தரை இறங்க தோகா விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.    இதையொட்டி அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.  அந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த கேரள பயணிகள் இதனால் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வரும் செவ்வாய்க்கிழமை அன்று இந்த விமானம் மீண்டும் இயக்கப்படலாம் என திருவனந்தபுர ஆட்சியர் தெரிவித்துள்ளார்.