வந்தவாசி ஆதிதிராவிடர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு துறை அதிரடி சோதனை: ரூ. 69 லட்சம் பறிமுதல்

Must read

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர்  அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் கணக்கில் வராத ரூ.69 லட்சம் சிக்கியது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வந்தவாசியில்  ஆதிதிராவிடர் நலத்துறையின் தனி வட்டாட்சியர் அலுவலகம் மூலம் வந்தவாசியிய்ல உள்ளது.

இந்த அலுவலகம் மூலம் அந்த பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் நலம் சம்பந்தமான அலுவல்கள் மற்றும்  மாணவர் விடுதிகளுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது.

இதில் முறைகேடு நடப்பதாகவும், லஞ்சம் வாங்குவதாகவும் ஏராளமான புகார்கள் வந்துள்ள நிலையில், லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர்.

இந்த அதிரடி சோதனையின் காரணமாக, வட்டாட்சியர் அலுவலகத்தின் அருகில் இருந்த ஒரு வீட்டில், 69 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் பணம், மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர், , தாசில்தார் அற்புதம் மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதிகளின் காப்பாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், கருவூலத்தின் அனுமதி பெறாமல், தாசில்தார் அற்புதம் நேரடியாக வங்கிக்கு சென்று பணத்தை எடுத்து வந்ததாகவும்,  விடுதி காப்பாளர்களுடன் சேர்ந்து, மாணவர்களுக்கான நிதியை இவர்களுக்குள் முறைகேடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், தாசில்தார் அற்புதம் மற்றும் 18 விடுதிகளில் காப்பாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article