கோவை: கோவை அரசு மருத்துவமனைக்கு இரண்டு அமரர் ஊர்தியைக் கொடுத்து உதவினார் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன். இது மக்களிடையே வரவேற்பை பெற்றாலும், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்புள்ள பழைய வண்டியை கொடுத்துள்ளதுன் அதற்கான இன்சூரன்ஸ் கூட கட்டப்படாமல் வழங்கியிருப்பது மக்களிடையே  அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் சுகாதாரப்பணியாளர்கள் பற்றாக்குறை, அமரர் ஊர்தி வசதி, ஆக்சிஜன் செறிவூட்டு உள்ளிட்ட வசதிகள் தேவைப்படுகிறது என்பதை அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் தெரிந்து கொண்டார்.

இதையடுத்து, சுகாதார பணியாளர் சிலரை பணியமர்த்தியதோடு 3 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் வழங்கி உதவினார். மேலும், இறந்தவர்களை எடுத்துச்செல்ல 2 ஆம்னி வேன்களையும், தனது பெயர் பொறித்து, கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கினார்.,

இதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு நம்மால் கட்டணமில்லா சேவையைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது, அந்த அமரர் ஊ ர்திகள் மிகவும் பழமையானது என்பதும், பழுது நீக்கப்பட்டு, மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.  வானதி சீனிவாசன் பரிசளித்த வாகன எண் TN 57 AF 9936. மாடல் 2012. 4வது ஓனர். இன்சூரன்ஸ் இல்லை என்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வானதி அக்கா… உயிரிழந்தோதை ஏற்றிச்செல்லும், அமரர் ஊர்தி விஷயத்திலுமா  கஞ்சத்தனம் செய்வது என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பலர்,  மத்தியில் ஆளும் அரசை சேர்ந்த ஒரு எம்எல்ஏ,  பல புதிய ஆம்புலன்ஸ் வண்டிகளையே இறக்க முடியும், ஆனால், வானதி ஸ்ரீனிவாசனோ, மக்களை ஏமாற்றும் வகையில் பழைய டப்பா வண்டியை பெயிண்ட் அடித்து ஷோ காட்டியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

பெயரைப்போட்டு விளம்பரப்படுத்தினால் மட்டும் போதாது, செய்வதை திருந்தச் செய்ய வேண்டும்.