
‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.
வெகுநாள் காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக நேற்று மாலை ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இந்தப் படத்தில் வெளிநாட்டில் படமாக்க வேண்டிய முக்கியமான சண்டைக் காட்சி ஒன்று பாக்கியுள்ளது.
இதற்காக அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் ஐரோப்பாவுக்கு பயணிக்கவுள்ளனர். குறைந்த அளவிலான குழுவினரை மட்டுமே இங்கிருந்து அழைத்துச் சென்று, மீதமுள்ளவர்களுக்கு அங்கிருக்கும் குழுவினரைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது ‘வலிமை’ படக்குழு.
[youtube-feed feed=1]