தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

82 வயதாகும் பாரதிராஜாவுக்கு சமீப நாட்களாக அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவர்களின் உதவியை நாடி வருகிறார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அவரை சந்தித்த கவியரசு வைரமுத்து அவர் விரைவில் நலமடைய வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

தவிர, பாரதிராஜா குறித்து தான் எழுதிய கவிதையை அவரிடம் வாசித்து காட்டியதை அடுத்து, “மருத்துவர்களை விட கவிஞர்களின் இதுபோன்ற வரிகளே தன்னை உற்சாகப்படுத்துகிறது” என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]