பிரபல திரைப்பாடலாசிரியர் வைரமுத்து உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளதாக இன்று காலை பரபரப்பான செய்தி பரவியது.
இதையடுத்து வைரமுத்து தரப்பை தொடர்புகொண்டபோது, “உடல் பரிசோதனைக்காக அப்பல்லோ சென்றிருக்கிறார்” என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வைரமுத்துவே, “வழக்கமான உடல் பரிசோனை செய்து கொள்வதற்காக அப்பல்லோ வந்தேன். முழு உடல் நலத்துடன் இருப்பதாக அப்போலோ மருத்துவக் குறிப்பு தெரிவிக்கிறது. வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.