திருப்பதி

வைகுண்ட ஏகாதசிக்கான திருப்பதி கோவில் தரிசன டிக்கட்டுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 23 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இந்த நாட்களில்.தினசரி 300 ரூபாய் தரிசனம் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனம் மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே

எனவே இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காகத் திருப்பதியில் 10 இடங்களில் கவுண்டர்கள் அமைக்கப்படும். நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.

இந்த இலவச தரிசன டோக்கன்களை ஆதார் அட்டைகளைச் சமர்ப்பித்து பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இணையத்தில் ரூ.300 தரிசன டிக்கெட் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இணையத்தில் வருகிற 10 ஆம் தேதி அன்று ரூ.300 தரிசன டிக்கெட் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]