தூத்துக்குடி என்.பெரியசாமி உடலுக்கு வைகோ அஞ்சலி

சென்னை:

டல் நலமில்லாமல் மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள என்.பெரியசாமி உடலுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பெரியசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் மதிமுக பொதுச்செயலாளர் கூறும்போது, தென்மாவட்டத்தில் திமுவை இரும்புக் கோட்டையாக மாற்றியவர் பெரியசாமி என்று புகழாரம் சூட்டினார்.


English Summary
Vaiko tribute to Tutcorin N. Periasamy's body