டில்லி

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திடிரென சந்தித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்து பாஜக அரசின் செயல்பாடுகளையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். சென்ற மாதம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வந்த மோடியை எதிர்த்து வைகோ கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இந்த மாதம் திருப்பூருக்கும் கன்யாகுமரிக்கும் பிரதமர் வரும் போதும் கருப்புக் கொடி ஆர்பாடம் நடத்த உள்ளதாக வைகோ தெரிவித்திருந்தார்.

தற்போது ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் ஆஜராக வைகோ டில்லி சென்றுள்ளார். பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் திடீரென சந்தித்துள்ளார். இந்த தகவலை படத்துடன் வெளியிட்டு நிர்மலா சீதாராமன் உறுதி செய்துள்ளார். இந்த சந்திப்பின் போது இருவரும் பேசியது குறித்து பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

பட்டாசு தொழில் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க நிர்மலா சீதாராமனை இந்த சந்திப்பின் போது வைகோ வலியுறுத்தியதாக கூறப்படுகிர்து. அத்துடன் பட்டாசு தயாரிக்க மர்றும் வெடிக்க உச்சநீதிமன்றம் விதித்துள்ள கட்டுபாடுகள் குறித்தும் வைகோ நிர்மலா சீதாராமனிடம் கருத்து தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.