பிப்ரவரி 12 அன்று மீண்டும் சபரிமலைக்கு செல்லும் பிந்துவும் கனகதுர்க்காவும்

Must read

டில்லி

ரும் 12 ஆம் தேதி மீண்டும் சபரிமலை சென்று தரிசனம் செய்ய உள்ளதாக ஏற்கனவே சபரிமலை சென்று வந்த பிந்துவும் கனகதுர்க்காவும் உசநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றம் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலையில் தரிசனம் செய்ய அனுமதி அளித்ததை ஒட்டி கேரளாவில் கடும் போராட்டம் நடந்தது. அங்கு சென்ற பல இளம் பெண்கள் திருப்பி அனுப்பபட்டனர். இந்நிலையில் கடந்த மாதம் 2 ஆம் தேதி அன்று இரு பெண்கள் காவல்துறை உதவியுடன் தரிசனம் செய்து திரும்பி வந்தது கடும் பரப்ரபை உண்டாக்கியது.

இதில் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்துவின் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுகப்பட்டுள்ளது. அத்துடன் பிந்துவும் கனக துர்க்காவையும் பல கடைகளில் நுழையக்கூட அனுமதிப்பதில்லை. பிந்துவின் சொந்த ஊரில் அவருடனும் அவர் தாயாருடனும் ஊர் மக்கள் பேசுவதைக் கூட நிறுத்தி விட்டனர்.

மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்க்காவை அவர் மாமியார் விட்டுக்குள் விடாமல் தாக்கினார். சிகிச்சை முடிந்து மீண்டும் வீட்டுக்கு வந்த கனகதுர்க்காவை அவர் கணவர் வீட்டுக்குள் வர அனுமதிக்கவில்லை. அதன் பிறகு கிராம நீதிமன்ற உத்தரவுடன் வீட்டுக்கு சென்றார். ஆனால் அவர் கணவரும் குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியேற் விட்டனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நடக்கும் மறு சீராய்வு மனு விசாரணையில் பிந்துவும் கனகதுர்காவும் ஆஜரானார்கள். அப்போது அவர்கள் இருவரும் வரும் 12 ஆம் தேத்ஹி அன்று மீண்டும் சபரிமலை செய்து தரிசனம் செய்ய உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களின் மதரீதியான வழிபாட்டை யாராலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article