ரெப்போ வட்டி விகிதம் குறைவு : வீடு, வாகனக் கடன் வட்டி குறையலாம்

Must read

டில்லி

ரிசர்வ் வங்கி நேற்று வங்கிகளுக்கு வழங்கும் கடன் வட்டியை குறைத்துள்ளதால் வீடு மற்றும் வாகனக் கடன் வட்டி குறையலாம் என கூறப்படுகிறது.

நேற்று ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிதிக்கொள்கை கூட்டம் நடைபெறும் போது எல்லாம் வட்டி விகிதம் குறையும் என எதிர்பர்ப்பு இருக்கும். தற்போது தொழில் துறை மிகவும் பின் தங்கி வருவதால் முதலீடுகளை அதிக அளவில் பெரும் நிலையில் சந்தை உள்ள்து. இந்த முதலீடு அதிகரிக்க முக்கியமானது குறைவான வட்டி விகிதம் ஆகும்.

நிதி அயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் ஏற்கனவே வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய இடைக்கால நிதி அறிக்கையில் நுகர்வுகலை அதிகரிக்க பல சலுகைகள் அளிக்கப்ப்பட்டுளன. அதை ஒட்டி முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் நேற்றைய கூட்டத்தில் வட்டி விகிதம் 0.25% குறைக்கபட்டது.

முன்பு 6.5% ஆக இருந்த ரெப்போ வட்டி தற்போது 6.25 % ஆக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வட்டிக் குறைப்பு வாடிக்கையாளர்களுக்கு மாற்றாபட வாய்ப்ப் உள்ளது. ஆகவே வங்கிகள் வீடு மற்றும் வாகனக் கடன் உள்ளிட்ட அனைத்துக் கடன்களூக்கான வட்டியை குறைக்கலாம் என கூறப்படுகிறது.

More articles

Latest article