கீழ்பவானி பாசன விவசாயிகள சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைவருமான அரச்சலூர் நல்லசாமி கரூரில் நேற்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளரை களம் இறக்குகிறோம்.
கேரளத்தைப் பின்பற்றி தமிழகத்திலும் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கேரளத்தில் உள்ளது போல தமிழகத்தில் மதுக் கடைகளை முழுவதுமாக மூடிவிட்டு, கள் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்.
கள் மீதான தடையை நீக்க வேண்டும்: கடந்த 10 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள விவசாய ஆணையப் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து, வரும் ஆகஸ்ட் மாதம் கள் இயக்கம் சார்பில் நடைப்பயணம் தொடங்கும். இந்த நடைப்பயணம் சென்னை காந்தி சிலையில் முடிவடையும்” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், ““கள்” போதைப்பொருள் என்று கூறிய வைகோவை எங்களிடம் (கள் இயக்கம் ) வாதிட அழைப்பு விடுத்தோம். ஆனால், அவர் அதற்கு முன்வரவில்லை.
2016 சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் இப்போதாவது வைகோ எங்களுடன் வாதிட முன்வர வேண்டும். இந்த வாதத்தில் வைகோ வெற்றி பெற்றால் 10 ரூபாய் கோடி பரிசு அளிப்போம். அதன் பிறகு அரசியலில் வைகோவுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். ம.தி.மு.க. மறுபடியும் புத்தெழுச்சி பெற்று 2021 தேர்தலில் ஆட்சியை பிடிக்கும். வைகோ முதல்வராகலாம். வைகோவின் வைகோவின் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.