சென்னை:
சென்னை   பெரிய மேட்டில் நடு ரோட்டில் அடையாளம் தெரியாத நால்வரால், முதியவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.
சென்னை கீழ்ப்பாக்கம்  ஜன்மய்யா சாலையில் வசிப்பவர்  பாரஸ்மல். (வயது 60)  அடகு கடை நடத்தி வருகிறார்.
Evening-Tamil-News-Paper_23442804814
இன்று முற்பகமல், தனது பெரியமோடு பேக்கர்ஸ் தெரு வழியாக தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது  வேறு இரு சக்கரவாகனங்கள் இரண்டில் வந்த நான்கு மர்மநபர்கள், பாரஸ்மல்லை வழிமறித்தனர். பிறகு மறைத்துவைத்திருந்த அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் பாரஸ்மல்லை  கண்டந்துண்டமாக வெட்டினர். பாரஸ்மல் அலறியபடியே தரையில் சாய்ந்தார். பிறகு மர்ம நபர்கள், தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி தப்பித்தனர்.
அந்த பகுதியில் இருந்த சிலர், பாரஸ்மல்லை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு மருத்துவர்கள், பாஸ்மல் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ல பகுதியில் நடந்த இந்த படுகொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.