நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜெயிலர் படத்தை அடுத்து லைகா நிறுவனத்துடன் இணைந்து 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தம் செய்திருப்பதாக இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது.

இந்த நிலையில், ரஜினியின் புதிய படத்தை சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கப்போவதாக கூறப்படுகிறது.
டான் படத்தைப் போல் காமெடி ஜனரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தில் சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் ரஜினியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற வடிவேலு-வை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
தலைவர் 170 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]