தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 4

 – சங்கர் வேணுகோபால்

இதுவரை எழுதிய பதிவுகளில் ஏறக்குறைய 60,147,000 தடுப்பூசிகள் அன்பளிப்பு மற்றும் வர்த்தகம் என்ற பெயரில் தகுதியும் தேவையும் இல்லாத நாடுகளுக்கு ஒரு தவறான அணுகுமுறை மூலம் தாரைவார்க்கப்படது என்று பார்த்தோம்

இந்த பதிவில் அந்த அணுகுமுறையில் உள்ள இமாலய தவறையும் நம் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும்.

அறிவற்ற அன்பளிப்பு

முதலில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் எத்தகைய நாடுகளுக்கு சென்றது அவர்களுக்கு நம் அன்பளிப்பு என்ன பலன் தந்தது என்று விரிவாக பார்ப்போம்

பொதுவாக அன்பளிப்பு என்பது எவருக்கு வாங்கும் சக்தி இல்லையோ அல்லது எவருக்கு  தேவை அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு தான் அன்பளிப்பு பொருத்தமாக இருக்கும் இதை தான் நம் முன்னோர்களும் பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்று உரைத்தார்கள்

ஆனால் இங்கே மோடி தனக்கு விளம்பரம் வேண்டி தடுப்பூசி தேவை இல்லாத பல நாடுகளுக்கு அன்பளிப்பு என்ற பெயரில் வீண் விரயம் செய்திருக்கிறார்

 

இங்கே தரப்பட்டிருக்கும் Line Graph மற்றும் Bar Graph ஆதாயமும் அறிவியலும் இல்லாத ஒரு வெற்று போக்கினையே காட்டும்

Covid தொற்று இல்லாத Nauru போன்ற நாட்டிற்கும் மற்றும் சில நூறுகளில் தொற்று இருக்கும் பல நாடுகளுக்கு ஆயிரக்கணக்கில் தடுப்பூசிகளை அன்பளிப்பு என்ற பெயரில் விரயம் செய்தது தெரிகிறது

மேலும் அதிர்ச்சி தரும் நிகழ்வு என்னவென்றால் சில நாடுகள் அவர்கள் சுயமாக வாங்கிய அளவிற்கு நிகராக அல்லது கூடுதலாக தடுப்பூசிகளை வாரி வழங்கியது எந்தவகையில் அறிவார்ந்த செயல் என்று தெரியவில்லை

மேலே குறிக்கப்பட்டுள்ள நாடுகள் யாவும் மிகவும் சீராக தொற்று மேலாண்மை கையாண்டிருக்கும் நாடுகள். அவர்களின் இறப்பு விகிதம் மிக மிக குறைவு என்று பார்க்கும் போது தடுப்பூசிகளை இவர்களுக்கு மடை மாற்றியது நம் நாட்டின் தொற்று மேலாண்மை மற்றும் இதர நாடுகளின் தொற்று மேலாண்மை இரண்டையும் சீர்க்குலைக்கும் மடமையே

GAVI கூட்டமைப்பில் முதலீட்டு பங்குதாரராக இருக்கும் ஒரு நாடு எப்படி WHO விதிமுறைகளுக்கு புறம்பாக இப்படி பொறுப்பற்று நடந்துக்கொண்டது என்பது சத்தமாக கேட்கப்பட வேண்டிய கேள்வி

மேலே இருக்கும் புள்ளிவிவரங்களில் சில நாடுகளின் நிலை குறித்து விரிவாக இப்போது பாப்போம்

Nauru

Nauru என்ற நாட்டின் மொத்த மக்கள் தொகை 12,600 மட்டுமே. ஒட்டுமொத்த மக்கள் தொகையும் பல முறை தொற்று சோதனை செய்த பிறகும் இந்த நாட்டில் இதுவரை ஒரேயொரு Covid தொற்று கூட இல்லை.

இருந்தபோதும் இந்த நாடு தனது சுயநிதியில் இருந்து 7,000 தடுப்பூசிகளை SK Bio நிறுவனத்திடம் இருந் து சந்தை விலைக்கு வாங்கிவிட்டது முன்னேற்பாடு கருதி.

இந்த நாட்டிற்கு தான் மோடி 10,000 தடுப்பூசிகளை இலவசமாக வாரி வழங்கினார். அதுவும் இந்த நாட்டிற்கு நேரிடையாக வான் போக்குவரத்து இல்லை ஆக இந்த அன்பளிப்பு ஆஸ்திரேலியா சென்று அங்கிருந்து Nauru நாட்டிற்கு தருவிக்கப்பட்டது எவ்வளவு போக்குவரத்து செலவு என்று சொல்ல வேண்டியது இல்லை இதற்காக மோடி தன்னை விளம்பர படுத்திக்கொண்டது தனி செலவு.

St. Kitts & Nevis

அடுத்ததாக St. Kitts & Nevis என்ற இந்த நாட்டிற்கு நாம் அன்பளிப்பாக தந்த தடுப்பூசி எண்ணிக்கை 20,000. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 53,544 மொத்த தொற்று இன்றுவரை 73. இருந்தபோதும் இந்த நாடு தன் சுயநிதியில் இருந்து 21,600 தடுப்பூசிகளை SK Bio என்ற நிறுவனத்திடமிருந்து வாங்கியது

இந்த நாடு தன் தேவைக்கருதி விலை கொடுத்து வாங்கிய தடுப்பூசி எண்ணிக்கைக்கு நிகராக 20,000 தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்கியது எந்த வகையில் ஒரு சாதுர்யம் என்று புரியவில்லை

நம் நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கில் உயிர் துறக்கும் சமயத்தில் பல மாநிலங்கள் தடுப்பூசி இல்லாமல் தவிக்கும் ஒரு காலகட்டத்தில் இப்படி தேவை இல்லாத நாடுகளுக்கு தடுப்பூசி சாதுர்யம் என்ற பெயரில் தடுப்போசிகளை வெளியேற்றியது எந்த நாட்டிலும் நடந்திராத ஒரு வினோத நிகழ்வு

Barbados

அடுத்ததாக Barbados எனும் தீவு நாடு அதன் மக்கள்தொகை 3 லட்சத்திற்கும் குறைவு. இந்த நாட்டின் மொத்த தொற்று எண்ணிக்கை 4,017 மட்டுமே இன்றைய தேதி வரை. இந்த நாடும் முன்னெச்சரிக்கை கருதி தனக்கு தேவை என்று கணக்கிட்டு 100,800 தடுப்பூசிகளை SK Bio மூலம் சுயநிதியில் இருந்து வாங்கியது இந்த நாட்டிற்கு நாம் அன்பளிப்பாக  வழங்கிய தடுப்பூசி எண்ணிக்கை 100,000

Dominica

இப்படி தீவு நாடுகளின் மீது மோடியின் அக்கறை நீண்டுக்கொண்டே இருக்கிறது. Dominica எனும் தீவு நாட்டிற்கு நாம் வாரி வழங்கிய அன்பளிப்பு என்பது 70,000 தடுப்பூசிகள்

72,150 மக்கள்தொகைக்கொண்ட இந்த நாட்டில் இன்றுவரை தொற்று எண்ணிக்கை 188 இந்த நாடும் முன்னெச்சரிக்கை கருதி AZவின் AMC தொகுப்பின் மூலம் 28,800 தடுப்பூசிகளுக்கு வேறு ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம்  வழங்கிய நிலையில் மோடி அந்த நாட்டு மக்கள்தொகைக்கு நிகராக 70,000 தடுப்போசிகளை அன்பளிப்பாக வழங்கியது எத்தகைய சாதுர்யம் என்றோ தொலைநோக்கு பார்வை என்றோ தெரியவில்லை

Fiji

மோடிக்கு தீவு நாடுகளின் மீதுள்ள மோகம் சிந்துபாத் கதை போல் நீண்டுக்கொண்டே  போகிறது

Fiji என்ற நாடு 902,394 மக்கள்தொகை எண்ணிக்கை கொண்டது இன்றுவரை அந்த நாட்டின் தொற்று எண்ணிக்கை 464 இந்த நாட்டிற்கு New Zealand 500,000 தடுப்பூசிகளையும் Australia 1,000,000 தடுப்பூசிகளையும் வழங்க ஒப்புக்கொண்ட நிலையில், Fiji நாடு அவசர தேவைக்கருதி 36,000 தடுப்பூசிகளை SK Bio மூலம் சுயநிதியில் இருந்து வாங்கிய நிலையில் Australia மேலும் 100,000 தடுப்பூசிகளை ஏற்பாடு  செய்திருந்தது

இப்படி தன் மக்கள்தொகைக்கு ஏற்ப இரண்டு மடங்காக தடுப்பூசிகளை கையகப்படுத்திக்கொண்ட Fiji நாட்டிற்கு மோடியின் அன்பளிப்பு 100,000

இப்படி எந்தவித அறிவியல் காரணங்களும் இல்லாமல் அரசியல் தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் தொற்று மேலாண்மை பொறுப்பும் இல்லாமல் தகுதியற்ற விளம்பர ஆசைக்காக தடுப்பூசிகளை வாரிவழங்கிய தவறான நடவடிக்கை குறித்து நமது தேசிய ஊடகங்கள் பேசாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது

வலுவான காரணங்கள் இல்லாத போதும் Congress கட்சி மீதும் திமுக போன்ற கட்சிகள் மீதும் சேற்றை வாரி இறைக்கும் Arnab போன்ற ஊடகவியலாளர்கள் மௌனமாக இருப்பது இந்த துரோகத்திற்கு அனைவரும் துணை என்பதையே குறிக்கிறது

இப்படி ஒன்றிய அரசின் தரவுகளின்படியே 10,715,000 தடுப்பூசிகளையும் மற்ற தரவுகளின்படி 11,910,000 தடுப்பூசிகளையும் அன்பளிப்பு என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்த மடத்தனத்தை சாதுர்யம் என்ற பெயரில் இன்றளவும் பெரிய ஊடகங்கள் மூடிமறைக்கும் காரணம் விளங்கவில்லை

இப்படிப்பட்ட செயல்கள் நம் நாட்டு தொற்று மேலாண்மையை எந்த வகையில் பாதித்தது என்பதை நினைக்கும் போது அதிர்ச்சியாகவே இருக்கிறது இது குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசாமல் இருக்கும் பொருட்டே பாராளுமன்றம் கூட்டப்படாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது

இவ்வளவு தவறான அனுகுமுறைகள் செய்துவிட்டு மாநிலங்கள் தங்கள் தேவையினை தாங்களே தங்கள் நிதியில் இருந்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்று போதனை செய்தது ஒன்றிய அரசின் அடிப்படை கொள்கையினையே கேலிக்கூ த்தாக்குவது என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை

மோடியிடம் சில கேள்விகள்:

AZ+GAVI விதிமுரைகளின்படி அதிகப்பட்ச விலை $3 அமெரிக்க டாலர்கள் என்று விலை நிர்ணயம் செய்த நிலையில் இந்த அன்பளிப்பிர்க்கான தடுப்பூசிகளை எவ்வவளவு விலை குடுத்து Serum நிறுவனத்திடம் இருந்து ஒன்றிய அரசு வாங்கியது?

இந்த அன்பளிப்பு நிகழ்வுகளுக்கு விளம்பரம் என்ற வகையில் எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது?

ஆக அன்பளிபிர்க்கான கொள்முதல் அதன் போக்குவரத்து அதனை விளம்பரம் செய்துக்கொள்ள என்று மக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவு செய்தது எவ்வளவு?

நிதிநிலை அறிக்கையில் நம் நாட்டு தேவைக்கான தொகை 35,000 கோடி ருபாய் என்று தாக்கல் செய்த நிலையில் 1 கோடிக்கும் மேலான தடுப்பூசிகளை இலவசமாக வழங்க எங்கிருந்து பணம் வந்தது?

GST நிலுவை பல மாநிலங்களுக்கு பாக்கி இருக்கும் நிலையில் இது போன்று விளம்பர ஆசைக்கு அந்த பணம் மடை மாற்றப்பட்டதா?

இப்படி அன்பளிப்பு ஆடம்பரம் குறித்து பார்த்த நாம் அடுத்த பதிவில் வர்த்தக ரீதியாக நடந்திருக்கும் கேலிக்கூத்தை பார்ப்போம்

தொடர்புடைய செய்தி :

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 1

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 2

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 3

குறிப்பு :

https://www.gavi.org/sites/default/files/covid/covax/3rd-round-allocation-Pfizer-Apr-Jun-2021.pdf

https://www.mea.gov.in/vaccine-supply.htm

Write-up, Data Research & Fact checking  By: Shankar Venugopal