ம்பம்

கேரள மாநிலத்தில் பணி புரியச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் கொரோனா தொற்று குறைந்து வரும் வேளையில் கேரளா மாநிலத்தில் மிகவும் அதிகரித்து வருகிறது.  நேற்று ஒரே நாளில் இங்கு 31,445 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 38,83,429 ஆகி உள்ளது.  இதில் நேற்று 217 பேர் உயிர் இழந்து மொத்தம் 19,974 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 20,271 பேர் குணமடைந்து மொத்தம் 36,92,628 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,70,312 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஏற்கனவே தமிழகத்தில் இருந்து கேரளா செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட சான்றிதழ்  இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   ஆனால் நேற்று முன் தினம் குமுளி வழியாகக் கேரளாவுக்கு பணிக்குச் சென்ற தமிழகத் தொழிலாளர்கள் நிறுத்தப்பட்டு தடுப்பூசி சான்றிதழுடன் இ பாஸ் வைத்திருப்பது கட்டாயம் எனக் கேரள வருவாய்த்துறையினர் அறிவித்துள்ளார்.

எனவே நேற்று காலை முதல் 31 கேரளா செல்லும் தொழிலாளர்களின் வாகனங்களை, தமிழகப்பகுதியிலேயே நிறுத்தி ஆவணங்களைச் சரிபார்த்து அனுப்ப தேனி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. கம்பம் மெட்டு, குமுளி வழியாகக் கேரளா செல்லும் தமிழக தொழிலாளர்களின் வாகனங்களை, லோயர்கேம்ப் மற்றும் கம்பம்மெட்டு பகுதிகளில் தமிழக காவல்துறையினர்நிறுத்தி சான்றுகளைச் சரி பார்த்து அனுப்புகின்றனர். அத்துடன் கம்பம்மெட்டு புறவழிச்சாலை சந்திப்பில், கேரளா செல்லும் தோட்டத்தொழிலாளர்களிடம் கம்பம் வடக்கு காவல்துறையினர்சான்றுகளைச் சரிபார்த்து அனுப்பி வைத்துள்ளனர்.