பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் வெறும் காலுடன் 416 கிமீ ஓடி சாதனை

Must read

மும்பை

பிரபல பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் வெறும் காலுடன் 416 கிமீ ஓடி சாதனை  புரிந்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான மிலிந்த் சோமன் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஆவார்.  இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, வித்தகன், அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்து  புகழ் பெற்றவர் ஆவார்.

பிரதமர் மோடி ஃபிட் இந்தியா என்னும் ஆரோக்கியமான இந்தியா திட்டத்தைத் தொடங்கி உள்ளார்.  இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்க மிலிந்த் சோமன் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் மும்பை சிவாஜி பூங்காவில் இருந்து  ஓட்டத்தைத் துவக்கினார்.

அவர் தினமும் 60 கிமீ வரை வெறும் காலுடன் 8 நாட்கள் ஓடி 416 கிமீ  தூரத்தில் குஜராத்தில் உள்ள சர்தார் படேல் சிலை வளாகத்தை 8 நாட்களில் அடைந்து சாதனை புரிந்துள்ளார்.   நடிகர் மிலிந்த் சோமன் ஒரு மராத்தான் பந்தய வீரர் ஆவார். பல போட்டிகளில் அவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

மிலிந்த் சோமன் மனைவி அங்கீதாவும் அவருடன் ஓடி உள்ளார்.  அவர் தினசரி 28 கிமீ தூரம் ஓடி உள்ளார்.

More articles

Latest article