சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள வி.கே.சசிகலா, இன்கறு 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்,

தமிழக சட்டசபை தேர்தல் களம் தகிக்கத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே 4 முனை போட்டி நிலவும் சூழலில், 5வது அணியாக சசிகலா ராமதாஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது. இதையடுதுது, நடைபெற உள்ள நிலையில், இதற்காக இன்று (மார்ச் 30) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது.
முன்னதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சிiய தொடங்கினார். இவரைது கட்சி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.
இந்த நிலையில், வி.கே.சசிகலா தனது கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளார். அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் வி.கே.சசிகலா வெளியிட்டுள்ளார்.
அதன்படி தென்காசி முன்னாள் அதிமுக எம்.பி. வசந்தி முருகேசன் சங்கரன்கோவில் தனித் தொகுதியிலும், ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை நாங்குநேரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். அமமுகவில் இருந்து அண்மையில் வெளியேறிய ஜீவிதா நாச்சியார் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவித்துள்ள சசிகலா, தவெக தலைவர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கில் நந்தக்குமார் போட்டியிடுவார் என்றும் கூறியுள்ளார்.
இதேபோல் மன்னார்குடியில் ராசுப்பிள்ளை, ராஜபாளையத்தில் ஹரிஷ், முதுகுளத்தூரில் ராம்குமார் பாண்டியன், திட்டக்குடியில் பழனிவேல், மதுரை மத்திய தொகுதியில் சக்ரவர்த்தி உள்ளிட்ட 21 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை சசிகலா அறிவித்துள்ளார். இதேபோல் கூட்டணி கட்சிகளுக்காக 3 தொகுதிகள் ஒதுக்கியுள்ளார். அதன்படி, சாத்தூர் மற்றும் ஆலங்குளம் தொகுதிகளை பசும்பொன் மக்கள் தேசம் கட்சிக்கும், நன்னிலம் தொகுதியை வெள்ளாளர் முன்னேற்ற கழகத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக சசிகலா அறிவித்துள்ளார்.
மேலும் கூட்டணீயல் இணைந்துள்ள பசும்பொன் மக்கள் தேசம் கட்சிக்கு சாத்தூர் மற்றும் ஆலங்குளம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நன்னிலம் தொகுதியில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொளச்சல், திண்டுக்கல், மதுரை சென்ட்ரல், மானாமதுரை, மன்னார்குடி, மயிலாடுதுறை, மேலூர், முதுகுளத்தூர், நாங்குநேரி, பரமக்குடி, ராஜபாளையம், சிவகங்கை, சிவகாசி, ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம், தென்காசி, திருமங்கலம், திட்டக்குடி, திருச்சி கழக்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]